தேவையான பொருட்கள் :
பீட்ரூட் – 1/4 கிலோ
தக்காளி – 3
பெரிய வெங்காயம் – 1
வெண்ணெய் – 25 கிராம்
மிளகுத்தூள் – தேவையான அளவு
கரம்மசால் பொடி – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோளா மாவு – 2 டீஸ்பூன்
கிரீம் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 3 கப்
செய்முறை :
* பீட்ரூட்டை தோல் சீவி துருவியால் துருவிக் கொள்ளவும்.
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சோளா மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
* குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீட்ரூட்டை போட்டு அத்துடன் மிளகுத்தூள், உப்பு, கரம்மசால் பொடி, வெண்ணெய் சேர்த்து 2 விசில் போட்டு வேக விடவும். வெந்ததும் மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய பீட்ரூட் சாறுடன் கரைத்து வைத்துள்ள சோளமாவு கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
* நன்றாக கொதிக்கும் போது அத்துடன் 1 டீஸ்பூன் கிரீம் சேர்க்கவும்.
* சூப்பரான பீட்ரூட் சூப் ரெடி.
* பிரெட் துண்டுகளை நெய்யில் வறுத்து சூடான கப்பில் போட்டு பரிமாறவும்.