ஜகமே தந்திரம் படத்தின் தாமதமான ரிலீஸால் தயாரிப்பாளர் சஷிகாந்த் 10 கோடி ரூபாய் வரை இழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதியே ரிலீஸாக வேண்டியது. ஆனால் கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் ரிலீஸ் தள்ளிப் போனது. ஒரு கட்டத்தில் வாங்கிய கடனுக்கு வட்டிக்கட்ட முடியாத தயாரிப்பாளர் ஓடிடிக்கு செல்லும் முடிவை எடுத்தார். ஆனால் அதற்கு தனுஷ் முட்டுக்கட்டை போட்டார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. இந்நிலையில் ஒரு வழியாக 13 மாத தாமதத்துக்குப் பின்னர் இந்த படம் ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த 13 மாத காலத்துக்கும் வட்டியாக மட்டும் சஷிகாந்த் 10 கோடி ரூபாய் கட்டியுள்ளாராம். திட்டமிட்ட தேதியில் படம் ரிலீஸாகி இருந்தால் அவருக்கு இந்த 10 கோடி கையில் லாபமாக இருந்திருக்கும் என திரை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஜகமே தந்திரம் ரிலீஸ் தாமதம்… தயாரிப்பாளர் இழந்த தொகை இவ்வளவா?
Loading...
Loading...
Loading...