Loading...
இணையத்தளத்தின் ஊடாக மதுபானங்களை கொள்வனவு செய்ய முடியாது என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து வகையான மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் மது விற்பனையை தடுக்கும் வகையில், மதுபானசாலைகளுக்கு முத்திரையிடப்பட்டுள்ளது.
Loading...
இந்த நிலையில், இணையத்தளத்தின் ஊடாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளத்தில் தகவலொன்று பகிரப்பட்டு வந்தது.
எனினும், இந்த முறையினூடாக மதுபான விற்பனைக்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், குறித்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் மதுவாித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Loading...