கர்ப்பிணியின் எடை ஆரோக்கியமாக அதிகரிக்க வேண்டும். ருசியான உணவை ருசிக்க வேண்டும் என்பதை காட்டிலும் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு மோசமான விளைவை உண்டாக்காத உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக ஆல்கஹால் தவிர்க்க வேண்டும். இன்ஸ்டண்ட் உணவுகளையும் தவிர்க்க வேண்டும் அல்லது குறைவான அளவு எடுத்துகொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள் நூடுல்ஸ் சாப்பிடலாமா என்பதை தான் இப்போது தெரிந்துகொள்ள போகிறோம்.
கர்ப்பகாலத்தில் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் பாதுகாப்பானதா?
கர்ப்பகாலத்தில் உடனடி நூடுல்ஸ் சாப்பிடுவது சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் கர்ப்பிணிக்கு எளிதாக இருக்கலாம். அதற்கு காரணம் சுவையான மசாலாவும் கூட. இவை ஒரே நொடியில் சமைக்கப்படலாம். எனினும் கர்ப்பிணிகள் இந்த இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல.
உண்மையில் கர்ப்பிணிகள் ஆரம்ப கட்டத்தில் நூடுல்ஸ் சாப்பிடுவது எந்த ஊட்டச்சத்தையும் வழங்காது.
அது குறிப்பிட்ட காலத்துக்கு பசியை நிறைவு செய்கின்றன. அதனால் அதை தவிர்ப்பது நல்லதாக இருக்கலாம். இந்த இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் தவிர்க்க மற்றொரு காரணம் எம்.எஸ்.ஜி ஆகும்.
இது அதிகமாக சாப்பிடும் கர்ப்பிணிகளது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் நூடுல்ஸ் தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் கர்ப்பகாலத்தில் வயிற்றில் வளரும் கருவுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்கள் சில உண்டு. இது கருவில் வளரும் குழந்தைக்கு ஆபத்தை உண்டாக்கும். அதனால் இதை சாப்பிட கூடாது.