தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக அவர் நடிப்பில் வெளியான `பைரவா’ படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் பிசியாக உள்ளார். இதனைதொடர்ந்து தமிழில் `சண்டக்கோழி-2′ படத்திலும், தெலுங்கில் 3 படத்திலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்டுள்ள கீர்த்தி சுரேஷின் அம்மாவும் நடிகையுமான மேனகா, ரஜினிக்கு ஜோடியாக `நெற்றிக்கண்’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் தந்தையும், தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் தனது மகளை பின்பற்றி படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் அருண் கோபி இயக்கத்தில் திலீப் நடித்து வரும் `ராம்லீலா’ படத்தில் சுரேஷ்குமார் அரசியல்வாதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.