Loading...
ஜெயம் ரவி – ஹன்சிகா மூன்றாவது முறையாக இணைந்து நடித்திருக்கும் ‘போகன்’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள நிலையில், படம் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான `மிருதன்’ படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி நடித்துள்ள `போகன்’ படத்தை வருகிற பிப்ரவரி 9-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்தை ‘ரோமியோ ஜுலியட்’ படத்தை இயக்கிய லக்ஷமண் இயக்கியுள்ளார்.
Loading...
‘போகன்’ படத்தில் அரவிந்தசாமி, வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். பிரபு தேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
Loading...