அனைவருக்குமே சிவப்பான குழந்தை வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்கான வழி என்னவென்று கேட்டால் உடனே பாலில் குங்குமப்பூவை கலந்து சாப்பிட வேண்டும் என்று தன கூறுவார்கள். ஆனால் இதை தவிர வேறு சில வழிமுறைகளை பின்பற்றினாலும் கூட சிவப்பான குழந்தை பிறக்க வாய்ப்புகள் உள்ளன. இவை அனைத்தும் கிராமத்து இயற்கை மருத்துவ முறைகள் ஆகும். உணவுப் பொருட்கள் கொண்ட மருத்துவ குணங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது…..
குங்குமப்பூ. வெற்றிலைப் பாக்கு
கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப் பூவையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும்.
பேரிக்காய்
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் பேரிக்காய் உண்ண ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
புடலங்காய்
புடலங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்கவைத்து 1-டம்ளர் சூப் குடிக்கவும்.
பீட்ரூட்
பீட்ருட்டை சிறிய துண்டுகளாக ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி கொத்தமல்லி இலை , சிறிது உப்புஇ இரண்டு மிளகு சேர்த்து சூப் மாதிரி குடிக்கலாம்.
குறிப்பு
என்ன தான் குழந்தை சிவப்பாக பிறக்க பல மருத்துவ முறைகளை பின்பற்றினாலும் கூட பெற்றோர்களின் மரபணு தான் இதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.