கட்டுவாபிட்டி புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரியின் மனைவியான சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி உயிரிழந்துள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அம்பாறை − சாய்ந்தமருது பகுதியில் வீடொன்றில் பதுங்கியிருந்த ஆயுததாரிகளை படையினர் சுற்றிவளைத்தவேளை அவர்கள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சாரா உள்ளாரா என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சாராவை அடையாளம் காண்பதற்காக சாய்ந்தமருது தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் சடலங்களை தோண்டி எடுத்து விசாரணைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.