குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் தான் சூப்பர் சிங்கர் ஷிவாங்கி.
இவர், சின்ன குழந்தை போல அவர் பேசுவது, செய்யும் விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அவரது காமெடிக்கு ரசிகர்களும் தற்போது ஏராளமாக இருக்கிறார்கள்.
மேலும், சிவகார்த்திகேயனின் அடுத்த படமான ‘டான்’ படத்தில் ஒரு ரோலில் நடித்து வருகிறார். மேலும் பல்வேறு பட வாய்ப்புகளும் தற்போது அவருக்கு வந்துகொண்டிருக்கிறது.
இதனிடையே, ஷிவாங்கி ரசிகர்கள் உடன் உரையாடினார். அப்போது அவரது ட்விட்டர் கணக்கிற்கு ப்ளூ டிக் கிடைத்துவிட்ட நிலையில் அவர் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறினார்.
அதில், ஷிவாங்கியை எப்போது ஹீரோயினாக பார்க்கலாம்? என ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு ஷிவாங்கி, “நான் என்னை ஹீரோயினாக யோசித்து பார்த்தது இல்லை.
ஆனால் ஒரு perfect ஸ்கிரிப்ட் என்னை தேடி வந்தால் நான் கண்டிப்பாக நடிக்க தயாராக இருக்கிறேன்”. இது கடவுள் செட்டிங் என ஷிவாங்கி தெரிவித்துள்ளார்.