சரியான தரவுகள் இன்றி நாடு திறக்கப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ம் திகதி நாட்டை திறப்பது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் நோய்த் தொற்று பரவுகை தொடர்பில் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு சரியான தகவல்களை வழங்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொவிட் தொற்று தொடர்பில் நாட்டின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு வழங்கி வரும் தகவல்களை ஐந்து சதத்திற்கேனும் நம்ப கூடியதல்ல என அவர் தெரிவித்;துள்ளார்.
பதிவாகும் நோயாளர் எண்ணிக்கை, மரணங்கள் எண்ணிக்கை மற்றும் நோய்த் தொற்று பரவுகை தொடர்பில் வழங்கப்படும் தரவுகளில் எவ்வித நம்பிக்கைத்தன்மையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சரியான தரவுகளை வெளியிட்டால் நாட்டில் தற்பொழுது உள்ள பயணத்தடையை நீடிப்பதா இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதானி உள்ளிட்ட அதிகாரிகளை நீக்கிவிட்டு புதிய செயற்திறன் மிக்கவர்களை அந்த இடங்களுக்கு நியமிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சரியான தரவுகள் எதுவுமின்றியே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது எனவும் இது ஆபத்தானது எனவும் டொக்டர் நவீன் டி சொய்சா கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.