தன்னுடைய பட விளம்பரத்துக்காகவே சூர்யா ஜல்லிக்கட்டை ஆதரிப்பதாக பீட்டா அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.ஜல்லிக்கட்டுக்கு தேவை என்பதற்கு தமிழகத்தில் ஆதரவும், போராட்டங்களும் பெருகிவரும்நிலையில், ஜல்லிக்கட்டை எதிர்த்த பீட்டா அமைப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் பீட்டாவை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அவர்களில் சூர்யாவும் பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும்விதமாக பீட்டா அமைப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் சூர்யா மற்றும் இதர நடிகர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இவ்வளவு காலதாமதாக குரல் கொடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசியது தற்செயலாக நடந்தது கிடையாது. அவருடைய சி3 படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவ்வாறு பேசியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டால் சில காளைகளும், சில மனிதர்களும் இறந்து போயுள்ளார்கள். அரசாங்கம் இந்த விஷயத்தை தடைசெய்தும் அதை நடத்துவதே மிகப்பெரிய தவறு. அப்படியிருந்தும், அதற்கு ஆதரவாக பேசுவது அதைவிட கேவலமானது என்று கூறியுள்ளது.