யூரோ கால்பந்து தொடரில் குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் செக் குடியரசு வீரர் மூக்கில் ரத்தம் சொட்ட கோல் அடித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
நேற்று Hampden park மைதானத்தில் நடந்த போட்டியில் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள குரோஷியா-செக் குடியரசு அணிகள் மோதின.
போட்டியின் 35வது நிமிடத்தில் குரோஷிய வீரர் Lovren முழங்கை செக் குடியரசு வீரர் Schick-ன் மூக்கில் பலமாக தாக்க அவர் மைதானத்திலே சுருண்டார்.
Schick மூக்கில் ரத்த வடிய மைதானத்தில் சரிந்து கிடப்பதை கண்ட போட்டியின் நடுவர், ஆட்டத்தை இடைநிறுத்தி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் பெனால்டி கிக் கொடுத்தார்.
இதனையடுத்து, மூக்கில் ரத்தம் சொட்ட சொட்ட பெனால்டி ஷாட் அடித்த Schick, அதை கோல் அடித்து அசத்தினார்.
எனினும், போட்டியின் இரண்டாவது பாதியில் குரோஷிய வீரர் பெரிசிக்கின் கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் குரோஷியா-செக் குடியரசு இடையேயான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.