நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத் தடைச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் 1281 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தகவல் வெளியிட்ட அவர்,
கண்டி, மாத்தளை மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளிலே அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி 39582 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 21 ஆம் திகதி சுகாதார துறையினரின் வழிகாட்டலின் பிரகாரம் நாடு திறக்கப்படுகின்றது. இருந்த போதிலும் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், உற்சவங்கள் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.
அரச மற்றும் தனியார் துறை பிரதானிகள் கூடுமான வரை இணைத்தளத்தின் ஊடாக சேவையினைப் பெற்றுக் கொள்ளுமாறும், தேவையானவர்களை மாத்திரம் அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.
பொது போக்குவரத்தினை பயன்படுத்துபவர்கள் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்கப்படுகிறீர்கள்.
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடைக்கு உரிய வகையில் கட்டுப்பட்டு நாட்டை தொற்றிலிருந்து விடுவித்து கொண்டு செல்வதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.