லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை நீங்கள் சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் எளிதாக சுத்தம் செய்யலாம். இந்த மோட்டோரோலா தொலைபேசியின் பெயர் மோட்டோரோலா டெஃபி (Motorola Defy). மோட்டோரோலா டெஃபி IP68 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது மற்றும் இது இராணுவ தர சான்று பெற்ற ஸ்மார்ட்போனாகும். மோட்டோரோலா டெஃபி ஸ்மார்ட்போன் இரட்டை சீல் செய்யப்பட்ட கட்டமைப்புடன் வருகிறது. இதனால் இந்த தொலைபேசி 5 அடி ஆழம் வரை நீரில் 35 நிமிடங்கள் வரை இருந்தாலும் ஒன்றும் ஆகாது. இது தவிர, மணல், தூசி, உப்பு மற்றும் ஈரப்பதம் இந்த தொலைபேசியை பாதிக்காது. மோட்டோரோலா டெஃபி போனுக்கு அதிர்வு மற்றும் வீழ் சோதனைகளுக்கும் உட்பட்டுள்ளது. 6 அடி உயரத்திலிலிருந்து விழுந்த பின்னரும் இந்த தொலைபேசி உடையாது. இந்த தொலைபேசியை சோப்பு மற்றும் லேசான கிருமிநாசினி கொண்டும் கழுவலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோட்டோரோலா விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்
மோட்டோரோலா டெஃபி போனின் விலை 329 யூரோ ஆக அதாவது இந்திய மதிப்பில் ரூ.29,000 ஆக நிர்ணயம் செய்யபட்டுள்ளது. இது 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பில் மட்டுமே விற்கப்படும். இதை கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் வாங்கலாம். இந்த தொலைபேசி இரண்டு ஆண்டு உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளுடன் வரும். நிறுவனம் இந்தியாவில் இந்த போனின் கிடைப்புத்தன்மை குறித்த எந்த தகவல்களை வழங்கவில்லை.
மோட்டோரோலா டெஃபியின் விவரக்குறிப்புகள்
ஆண்ட்ராய்டு 10 OS உடன் மோட்டோரோலா டெஃபி வழங்கப்படுகிறது. இது தவிர, விரைவில் ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பும் இதில் கிடைக்கும். தொலைபேசியில் இரட்டை சிம் ஆதரவு உள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் 6.5 அங்குல HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. தொலைபேசியில் ஸ்னாப்டிராகன் 662 செயலி, 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது, இதை மெமரி கார்டின் உதவியுடன் மேலும் அதிகரிக்க முடியும்.
மோட்டோரோலா டெஃபி கேமரா
இந்த மோட்டோரோலா தொலைபேசியில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் முதன்மை லென்ஸ் 48 மெகாபிக்சல் கொண்டது. இரண்டாவது லென்ஸ் 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் மற்றும் மூன்றாவது லென்ஸ் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகும். இது செல்ஃபிக்களுக்காக 8 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது.
மோட்டோரோலா டெஃபி பேட்டரி
இந்த ஸ்மார்ட்போன் 5000 mAh பேட்டரியை 20W டர்போபவர் சார்ஜிங் வசதியுடன் கொண்டுள்ளது. இணைப்பிற்காக, இது ஒரு யூ.எஸ்.பி டைப்-C போர்ட், புளூடூத் v5, NFC, VoLTE மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.