Loading...
வயதாகும் போது முதல் பாதிப்பு கண்களுக்கு தான். ஏனெனில் கண்களுக்கு கீழ் தான் முதலில் அதிகம் சுருக்கம் விழுந்து விடுகின்றது.
கண்களுக்கு கீழே உள்ள பகுதியில் குறைந்த அளவு கொலாஜென் மற்றும் எலாஸ்டின் இருப்பதால் மிகவும் மெலிதாக இருக்கும். இதுவே எளிதில் சுருக்கங்கள் தோன்ற காரணமாயிருக்கிறது. இந்த சுருக்கத்தை இரசாயன பொருட்கள் கொண்டு போக்க முயற்சிப்பது சிறந்த தீர்வு இல்லை.
Loading...
கண்களுக்கு கீழ் விழும் சுருக்கத்தை போக்க சில எளிய வழிமுறைகள் உண்டு. இது தோல் சுருக்கத்தை நீவி சருமத்தை சமநிலையில் வைத்திருக்க செய்யும்.அந்தவகையில் கண்களுக்கு கீழ் இருக்கும் சுருக்கத்தை எப்படி எளிய முறையில் போக்கலாம் என்று பார்ப்போம்.
- தேனை முகத்துக்கு பயன்படுத்தும் போது முதலில் முகத்தை சுத்தம் செய்யுங்கள்.பிறகு கண்களில் கீழ் இருக்கும் சுருக்கம் போக கீழிருந்து மேல் திசைக்கு தேனை தடவி மசாஜ் செய்யுங்கள். இது சருமத்துளைகளை அழிக்கிறது. தேன் மசாஜ் செய்த பிறகு மென்மையான பருத்தி துணியை கொண்டு மந்தமானநீரில் ஊறவைத்து அந்த நீரை வெளியேற்றி முகத்தை சுத்தம் செய்யுங்கள்.
- முல்தானி மிட்டி – 2 டீஸ்பூன், சந்தனப்பொடி – 1 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன், தண்ணீர் – தேவைக்கு கிளிசரின் – சில துளிகள் கலந்து ஃபேஸ் பேக் போடவும்.
- வாழைப்பழத்தை மசித்து பேஸ்ட் ஆக்கி க்ரீம் பதத்துக்கு குழைத்துவிடவும். பிறகு இதை பேஸ்ட் ஆக்கி முகம் முழுக்க தடவி எடுக்கவும். அரை மணி நேரம் கழித்து வெற்று நீரில் கழுவ வேண்டும். இதை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் வேறுபாட்டை உணரலாம்.
- சிறிது தக்காளி சாறு சேர்த்து இரண்டையும் பாதிக்கப்பட்ட இடங்களில் விரல்களால் மசாஜ் செய்தபடி தேய்க்கவும். தினமும் செய்து வந்தால் சில மாதங்களில் வேறுபாடு தெரியும். வெள்ளரிக்காய் சாறுடன் பன்னீர், முல்தானி மிட்டி போன்றவற்றையும் கலக்கலாம்.
- இரவு தூங்குவதற்கு முன்பு தேங்காயெண்ணெயை சில துளிகள் சேர்த்து முகத்தில் சுருக்கங்கள் இருக்கும் இடத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்யும். இறந்த சரும செல்கள் அகற்றப்படும். இதனால் சருமம் இறுக்குவதும் உண்டு.
- கற்றாழை ஜெல் ஒரு டீஸ்பூன் ஊறவைத்து அரைத்த பாசிபயறு உடன் கலந்து ஃபேஸ் பேக் தயாரிக்கவும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி எடுக்கவும். பிறகு 1 மணி நேரம் கழித்து முகத்தை சுத்தமான மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகச்சுருக்கம் நீங்கும்.
Loading...