பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் லீலைகள் முதல் முறையாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் 64 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளியில் பயிலும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி பொலிசார் சிவசங்கர் பாபாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.
தன்னை கடவுளின் அவதாரம் எனக்கூறிக் கொள்ளும் பாபா, எந்தவித பயமும் இல்லாமல் தனது இஸ்டம் போல் பதின்பருவ சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தி வந்தது விசாரணையில் அம்பலமாகி வருகிறது.
அதற்கு பாபாவின் பெண் சீடைகளும் உதவியதும், விசாரணையில் தெரியவந்துள்ளதாக, சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீது புகாரளித்த மாணவிகளின் எழுத்துப்பூர்வ புகார்களில் வெளிவந்துள்ள தகவல் அதிர வைத்துள்ளது.
மாணவிகளை அடிக்கடி ஆபாச ஓவியங்களை வரையச் சொல்லி வற்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்த சிவசங்கர் பாபா அதன் மூலம் பாலுணர்வை தூண்டி தனது காம லீலைகளை அரங்கேற்றி வந்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்காக தனியாக நோட்டுப் புத்தகம் வாங்கி வரச்சொல்லி, ஆபாச படங்கள், அந்தரங்க உறுப்புகளை படமாக வரைய வைத்து காண்பிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வந்த சிவசங்கரன், அவ்வாறு ஓவியம் வரையும் மாணவிகளுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குவான் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
இதுபோன்று சிவசங்கர் பாபாவின் சொல்படி கேட்டு, பல மாணவிகள் தவறு என தெரியாமலேயே தவறான பாதைக்கு சென்றதாகவும், தன்னுடன் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் ஒரு நோட்டு முழுவதும் டம்மி பாபா சொன்னதுபோல் ஆபாசப் படங்களை வரைந்து வைத்திருந்ததாகவும், மாணவி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் சீடர்கள் மூலம் மாணவிகளை வரவழைத்து மதுபானங்கள் கொடுத்து சிவசங்கர் பாபா பாலியல் சீண்டலில் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது.
தன்னுடன் பயின்ற இரண்டு மாணவிகள் சிவசங்கர் பாபாவுடன் இருந்ததை நேரில் பார்த்ததாக, பாதிக்கப்பட்ட மாணவி புகாரில் கூறியுள்ளது கொடூரத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பாபாவின் பாசத்திற்குரிய இன்னும் பல பெண் சீடர்கள் கொத்தாக சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.