பெண்களுக்கு எப்போதும் மரியாதை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அதனையே தனது பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுத்து வளர்த்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, எந்த பெண்ணையும் காயப்படுத்தக் கூடாது, அவ்வாறு செய்தால் உங்கள் தலையை வெட்டுவேன் என் நான் என் மகன்கள் ஆர்யன், ஆப்ராமிடம் தெரிவித்துள்ளேன்.
எந்த பெண்ணையும் வா, போ என்று மரியாதை இல்லாமல் பேசக்கூடாது. யாராக இருந்தாலும் மரியாதையுடன் வாங்க, போங்க என்று பேச வேண்டும் என என் மூத்த மகன் ஆர்யனிடம் தெரிவித்துள்ளேன்.
வீட்டில் சட்டை இல்லாமல் இருக்கக் கூடாது என்று என் மகன்களிடம் கூறியுள்ளேன். தாய், சகோதரிகள் முன்பு சட்டை இல்லாமல் இருப்பது மரியாதை இல்லை.
அதனால் எப்பொழுதும் சட்டை அணிந்திருக்க வேண்டும் என்பது மகன்களுக்கு நான் இட்டுள்ள கட்டளை.
நான் பெண்ணாக இருக்க விரும்புகிறேன், பெண்கள் வலுவில்லாதவர்கள் என்று நான் நினைக்கவில்லை என கூறியுள்ளார்.