இருபத்தியேழு நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்கள்தான் “திரு”என்று ஆரம்பிக்கும் அவை திருவாதிரை,திருவோணம்.முன்னது சிவனுக்கு உரியது மற்றொன்று விஷ்ணுக்கு உரியது.
இதனால், சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர். மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா என்பர்
இந்நட்சத்திர நாளில் சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷம்.
திருவாதிரை களி
திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது. திருவாதிரை விரதம் இருப்பவர்கள் களி செய்து படைக்கும் வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு, சிவாலயம் சென்று நடராஜரைத் தரிசித்து வருவது சிறப்பு என்கின்றன புராணங்கள்.
இந்த திருவாதிரைக் களிக்கு ஒரு வரலாற்று புராணமே உள்ளது.
திருவாதிரையில் ஒரு வாய் களி”என்பது பழமொழி விறகு வெட்டியாகிய சேந்தனின் பக்தியை மெச்சி,சிவனடியார் வேடத்தில் அவன் வீட்டில் களி தின்னதோடு மட்டுமல்லாமல்,மறு வேலைக்கு வாங்கி கொண்டார் சிவன்.
தில்லை கோயிலை திறந்த பணியாளர்கள் நடராஜரின் அருகில் களி கொட்டி கிடந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டு அரசரிடம் கூறுகிறார்கள்,
சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அரசர் அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.
எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது.
அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக சேந்தா நீ பல்லாண்டு பாடு என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.
சேந்தனார் இறைவன் அருளால் “மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல என்று தொடங்கி “பல்லாண்டு கூறுதுமே என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.
சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும்,
இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.திருவாதிரை நாளில் விரதம் இருந்து களி சாப்பட்டால் அளப்பறிய பலன் கிடைக்கும்.
நாளை 11-01-2017 புதன்கிழமை ஆருத்ரா தரிசனமாகும் அன்று விரதம் இருந்து சிவனை தரிசனம் செய்யுங்கள் உங்கள் பாவமெல்லாம் விலகி அளப்பறிய சந்தோசங்கள் கிட்டும்.
ஆதிசேஷன் உருவில் பதஞ்சலி முனிவர்:
பதஞ்சலி முனிவருக்கு அருள் பாற்கடலில் ஒரு நாள் மகாவிஷ்ணு திடீரென்று மகிழ்ச்சியில் திளைப்பதைக் கண்ட ஆதிசேஷன் அதற்குக் காரணம் கேட்டார். திருவாதிரை நாளன்று சிவபெருமான் நடேசனாக ஆடிய திருத்தாண்டவமே தனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார் திருமால்.
பரந்தாமனையே மெய்மறக்கச் செய்த அந்த நாட்டியத்தைத் தானும் காண ஆவல் கொண்டார் ஆதிசேஷன். பெருமாளும் ஆசியளித்தார். உடனே ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் பதஞ்சலி முனிவராக உருக் கொண்டு, பூலோகம் வந்து தவம் செய்யத் தொடங்கினான்.
தவம் உக்கிரம் அடைந்தபோது, பதஞ்சலி முனிவர் திடீரென்று கேட்ட குரலால் கண்விழித்தார். சிவன் தோன்ற, பதஞ்சலி சிவனிடம் திருநடனம் காணவேண்டி, உம்மைப் போலவே வியாகர் பாதரும் காத்திருக்கிறார்.
நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீராக என்று கூறி மறைந்தார். அதன்படி பதஞ்சலி முனிவரும் வியாக்ர பரதரும் சிதம்பரம் திருத்தலத்தில் திருவாதிரை நாளில் திருநடனத்தைக் கண்டனர்.
எனவே மார்கழி திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து, சிவாலயம் சென்று தரிசனம் கண்டால் நமது பாவங்கள் விலகி புண்ணியம் பெருகும்.