இந்தியாவில் பெண் ஒருவர் கணவனை கொலை செய்வது எப்படி என்று கூகுளில் தேடி அதன் பின், அவரை காதலன் உதவியுடன் கொலை செய்த சம்பவம் பொலிசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது
. மத்தியப்பிரதேச மாநிலம் Harda மாவட்டத்தைச் சேர்ந்த Tabassum என்ற பெண், தன்னுடைய கணவர் மர்மான முறையில் உயிரிழந்துவிட்டதாக பொலிசில் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க துவங்கிய போது, Tabassum என்ன நடந்தது? அவர் எப்படி இறந்தார்? என்பது கூட தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
அதன் பின் பொலிசார் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில், Tabassum-ன் கணவர் மஹாராஷ்ட்டிராவில் வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையில், Tabassum-க்கு இங்கு Irfan என்ற நபர் அறிமுகமாகியுள்ளார்.
குடும்ப நிதி நெருக்கடி காரணமாக Tabassum அவரிடம் நெருங்கி பழகியுள்ளார். இந்நிலையில், கொரோனா காலகட்டம் என்பதால், Tabassum-ன் கணவர் Harda-வுக்கு திரும்பியுள்ளார்.
இதன் காரணமாக அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ள முடியவில்லை. இதனால், அவர்கள் கொலை செய்ய முடிவு செய்தனர். அதன் படி Tabassum இணையத்தில் கணவனை கொலை செய்வது எப்படி? அந்த உடலை அப்புறப்படுத்துவது எப்படி என்றெல்லாம் தேடியுள்ளார்.
அதன் பின், கணவருக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பதால், அவருக்கு வழக்கமாக கொடுக்கும் மருந்தை கொடுக்காம, வேறொரு மருந்தை சம்பவ தினத்தன்று கொடுத்துள்ளார்.
இதன் காரணமாக அவர் சுயநினைவை இழக்க, Tabassum வீட்டிற்கு Irfan வந்துள்ளார். இதைத் தொடர்ந்து , அவரின் கை மற்றும் கால்களை கட்டிய இவர்கள், அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளனர்.
பொலிசாருக்கு கணவர் மரணம் குறித்து எதுவுமே தெரியாது கூறியதால், பொலிசாரின் சந்தேகம் இவர் மீது வலுத்தது. அப்போது அவரின் போன் அழைப்புகளை ஆராய்ந்த போது, அவர் Irfan-யிடம் அதிகம் பேசியிருப்பது தெரியவந்தது.
அதன் பின்னரே பொலிசார் தங்கள் பாணியில் விசாரிக்க, இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 18-ஆம் திகதி நடந்துள்ளது. குற்றம் நடந்த 24 மணி நேரத்தில் கொலையாளிகளை கண்டுபிடித்து சிறையில் அடைத்துவிட்டதாக பொலிஸ் தரப்பு கூறியுள்ளது.