Loading...
யாழ்ப்பாணம்- பருத்தித்துறை கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களையே கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த மீனவர்கள், தொழிலுக்குப் பயன்படுத்தி 4 படகுகள், வெளியிணைப்பு இயந்திரங்கள் மற்றும் 500க்கு மேற்பட்ட கடலட்டைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
Loading...
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...