Loading...
திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவில் உள்ள கப்பல்துறை கிராமத்தில் வாள்வெட்டுச் சம்பவமொன்று, நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் வயோதிப பெண்ணொருவரின் கை, மணிக்கட்டுடன் துண்டாக்கப்பட்டுள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்வம் தொடர்பாக பொலிஸாருக்கு முறையிடப்பட்டதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர்.
Loading...
துண்டாக்கப்பட்ட கை சகிதம், காயமுற்ற பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்வம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...