தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது இது சம்மந்தமாக பிரதமரை தமிழக முதல்வர் சந்தித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு எனது ஆதரவு உண்டு. ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது என கூறிவிட்டார்.
இந்நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா விடுத்துள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அறிவித்திருந்தேன்.
ஆனால் தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் மாணவர்களின் எழுச்சி போரட்டங்கள் உச்சத்தை அடைந்துள்ளதால் கட்சியின் பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துள்ளார்.