விக்கலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை தெரிவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட செல்ஸீ மேன்னிங்குக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை பராக் ஒபாமா குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
ராணுவத்தின் பகுப்பாய்வு பிரிவில் பணியாற்றி வந்தவர் பிராட்லி மேன்னிங்.
இவர் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியதுடன், தனது பெயரை செல்ஸீ மேன்னிங் என மாற்றிக் கொண்டார்.
ராணுவத்தில் பணியாற்றிய போது ரகசியங்களை விக்கலீக்ஸ் இணையதளத்திடம் தெரிவித்த குற்றத்திற்காக 2013ம் ஆண்டு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் பராக் ஒபாமா இவரது தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
இவருக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது, மேலும் அசாஞ்சேவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருணை அடிப்படையில் செல்ஸீ மேன்னிங்கை விடுதலை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.