தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ஜகமே தந்திரம் படம், கடந்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில், கலையரசன், ஜோஜூ ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த விமர்சனங்கள் குறித்து படக்குழுவினர் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த், தற்போது மறைமுகமாக பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “வெற்றி பெறுவது மட்டும் வெற்றியல்ல, தோற்பது தோல்வியுமல்ல, தொடர்ந்து உங்கள் பாதையில் சென்றுகொண்டே இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கு வந்திருக்கும் எதிர்மறை விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் பொருட்டே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.