மிகவும் மதிப்பு மிக்க வீரர்களில் சிறந்தவர் இந்திய சுழற்பந்து வீச்சாளார் ரவிச்சந்திர அஸ்வின் என பயிற்சியாளர் டேவ் வாட்மோர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டேவ் வாட்மோர் இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை புகழ்ந்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, மிகவும் சாதூர்யமான வீரரான அஸ்வினை பெற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் மிகுந்த மகிழ்ச்சியுடன் தான் இருக்க வேண்டும். உண்மையை கூறினால் இந்திய அணியின் சொத்து ரவிச்சந்திரன் அஸ்வின் தான்.
மேலும், இலங்கையின் முரளிதரன் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகம் கிடையாது, ஆனால் அவர் பேட்ஸ்மேன் அல்ல. துடுப்பெடுத்தாடுவதிலும் சிறந்து விளங்குகிறார் அஸ்வின் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
இவர் இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.