வேப்பம்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வாரம் ஒருமுறை வேப்பம்பூவை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று வேப்பம்பூ வேர்க்கடலை துவையல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வேப்பம்பூ – ஒரு கப்,
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 2 டீஸ்பூன்,
வேர்க்கடலை – கால் கப்,
கடுகு, பெருங்காயம் – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 2,
உப்பு, புளி, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதில் வேப்பம்பூவைச் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்து, தனியாக வைத்து கொள்ளவும்.
சிறிதளவு எண்ணெயில் கடுகு, பெருங்காயத் தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து, சிவக்க வறுத்து இறக்கவும்.
வறுத்த பொருட்களை மிக்சியில் போட்டு அதனுடன் வேர்க்கடலை, உப்பு, புளி சேர்த்து, தண்ணீர் தெளித்து துவையல் பதத்தில் அரைக்கவும்.
அருமையான வேப்பம்பூ வேர்க்கடலை துவையல் ரெடி.
பலன்கள்: சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். எளிதில் செரிமானம் ஆகும். வாய்க் கசப்பைப் போக்கும்.