சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் பிரியங்கா. அதில் டாப் போட்டியாளராக இடம்பிடித்த அவர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகவில்லை. ஆனாலும் அவரது குரல் மக்கள் மத்தியில் பிரபலமானது.
சின்னச் சின்ன வண்ணக் குயில் பாடலின் பிரியங்கா வெர்ஷன் என்று யூடியூபில் தேடிப் பார்க்கும் அளவுக்கு தனது குரல் வளத்தால் வசீகரித்தவர்.
இதைத்தொடர்ந்து இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இமான், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இடையில் பாடல்கள் பாடியிருக்கிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் வழங்கிய பேட்டியொன்றில் தனது கூந்தல் நீளமாக இருக்க என்ன காரணம் என்று பகிர்ந்துள்ளார்.
அதில் “தலைமுடி நீளமாக இருக்க மாத்திரை, மருந்துகள் தான் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும், மன அழுத்தம் இன்மை, நல்ல தூக்கம், புரோட்டின் உணவுகள் எடுத்து கொண்டால் கூட போதும்” என்று கூறுகின்றார்.
அதுமட்டுமின்றி இவர் பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். தற்போது அது என்னென்ன என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவில் பார்ப்போம் https://youtu.be/JvABbyDV8OQ