சமகால அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடும் வகையில் கூட்டு எதிர்க்கட்சியினால் செயற்பாடொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நுகேகொடையில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணி ஊடாக இந்த எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் சிலரை மேடையில் களமிறக்குவதன் ஊடாக இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய அமைச்சர்கள் சிலருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில அமைச்சர்களுக்கு கோடி கணக்கில் பணம் வழங்குவதற்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர் பதவி வழங்குவதற்கும் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் அமைச்சர்கள் இந்த கலந்துரையாடல்களை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில அமைச்சர்களுக்கு மஹிந்த நேரடியாக தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தன்னுடன் இணைந்து மாற்றம் ஒன்றுக்கு செல்வோம் என குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.