திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஆறு பயணிகளிடமிருந்து மூன்று கோடி ரூபாய மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இந்தியா நிறுவனத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்கள் தமிழகத்திலிருந்து பயணிகள் இன்றி சென்று வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் வரும் பயணிகளிடம் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கொடுத்து அனுப்பப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சார்ஜாவில் இருந்து திருச்சி வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய கிடைத்தது. இதனை தகவல் தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான 6 பயணிகளை அழைத்து அவர்கள் உடமைகளை சோதனை செய்தபோது அவர்கள் தங்களது உடமைகளில் ரூபாய் 3கோடி மதிப்புள்ள 6,231 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை மத்திய வருவாய் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ய து 6 பையனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் தங்கநகைகள் குறித்த விவரங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் திருச்சி விமான நிலையத்தில் மட்டும் பறிமுதல் செய்யப்படும் தங்க நகைகள் குறித்து எந்தவிதமான பத்திரிகைச் செய்திகளும் சுங்கத்துறை அதிகாரிகளால் வெளியிடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.