Loading...
ஜூன்23, 2021 – கிளிநொச்சி.கிளிநொச்சி,
கனகபுரம் டிப்போ வீதியில் அம்பாள்குளம் பொருளாதார சந்தைக்கு அருகில் இன்று (23) இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி செல்வா நகரைச் சேர்ந்த அருளானந்தம் மைக்கல் வயது 49 என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் பலியாகியுள்ளார்.
Loading...
உந்துருளியில் பயணித்தவரை சிறிய ரக லொறி ஒன்று மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். விபத்தில் படுகாயமடைந்தர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Loading...