இன்றைய நவீன உலகில் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை என்பது பலர் விரும்பக்கூடிய விஷயமாக உள்ளது. நீண்ட நாட்கள் வாழ ஜப்பானில் இக்கிகய் என்கிற ஒரு கருத்து உண்டு.
நீண்ட நாள் மனிதர்கள் வாழ்வதற்கான பல விஷயங்களை இக்கிகய் கூறுகிறது. இது நமது ஆத்மா மற்றும் வாழ்நாளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நாம் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும்போது இது ஒரு ஆரம்பத்தை நமக்கு தருகிறது. இதை எப்படி துவங்குவது என உங்களுக்கு தெரியாவிட்டால் இதுக்குறித்து இக்கிகய் ஆசிரியர் கூறும்போது இது உடலில் உள்ள ஐந்து தூண்களில் இருந்து இந்த நடவடிக்கை துவங்குகிறது.
உங்களை நீங்களே ஏற்றுக்கொள்வது. மற்றவர்களுடன் உங்களை இணைத்துக்கொள்ளுதல் மற்றும் சிறிய விஷயங்கள் வழி மகிழ்ச்சியை கண்டறிவது ஆகியவை இக்கிகய்யின் ஆரம்ப விஷயங்களாக உள்ளன.
மேலும், ஆரோக்கியமான உணவு என்பது நீண்ட ஆயுளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தாவர அடிப்படையிலான உணவுகள் அல்லது மத்திய தரைக்கடல் உணவுகள் உங்கள் ஆரோக்கிய உணவிற்கான பட்டியலில் இருப்பது மூலம் உங்கள் வாழ்க்கையை நீங்கள் நீண்ட ஆரோக்கியமாக வாழ முடியும்.
ஆரோக்கிய உணவுகள் உண்பது மட்டும் இன்றி உங்களது காலை உணவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காலை உணவுகள் ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியமாகும். கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டாவில் வசிக்கும் 105 வயதுடைய ஒரு பெண் தினமும் காலை சமைத்த ஓட்ஸ் சாப்பாட்டை உணவாக எடுத்துக்கொள்வதாக கூறுகிறார்.
ஆரோக்கியமான பருப்புகள் மற்றும் புரத சத்து நிறைந்த சோயா பால் ஆகியவை ஒரு ஆரோக்கியமான காலை உணவாக பார்க்கப்படுகிறது. இது இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
மேலும், அனைவரும் காலையில் ஒரு கப் காபியை எடுத்துக்கொள்கின்றனர். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கப் காபி வரை அவர்கள் குடிக்கின்றனர்.
அமெரிக்காவின் இதயம் குறித்த நிறுவனம் இதுக்குறித்து கூறும்போது காபியில் உள்ள காஃபினேட் மற்றும் டிகாஃப் இரண்டுமே இறப்புக்கான ஆபத்தை குறைக்கும் திறன் கொண்டது என கூறுகின்றனர்.
ஆனால் உங்கள் கோப்பை காபியில் இனிப்பு கட்டிகளை அதிகம் சேர்க்க வேண்டாம். அதற்கு பதிலாக வேறு ஆரோக்கியமான பொருட்களை காபியில் சேர்க்கலாம். தாவர அடிப்படையில் உருவாகும் பாலில் காபி செய்து குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும். அல்லது ஒரு கப் காபிக்கு பதிலாக தேநீரை சேர்க்கலாம்.
இவர்கள் தங்கள் உறவினர்கள், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் காபி மற்றும் தேநீர் அருந்துகின்றனர். தேநீர் அரட்டை அடிக்கவும், சிரிக்கவும், உடல்நலம் மற்றும் மகிழ்ச்சி இவை அனைத்திற்கும் உதவுகிறது.
நமது நாள் எப்போதும் நல்லப்படியாக துவங்க வேண்டும் என பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். எனவே நமது காலை நேரத்தை நாம் இனிமையாக துவங்குவதன் மூலம் நமது நாளை நாம் நல்லப்படியாக அமைக்க முடியும்.