Loading...
பிரான்ஸில் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குரிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி முதல்கட்ட வாக்கெடுப்பு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு ஏப்ரல் 24 ஆம் திகதியும் இடம்பெற உள்ளது.
Loading...
அதேவேளை, சட்டமன்ற தேர்தல் 2022 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனாதிபதி தேர்தல் 2017 ஆம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே 7 ஆகிய திகதிகளில் இடம்பெற்றிருந்தன. சட்டமன்ற தேர்தல் ஜூன் 11 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இடம்பெற்றிருந்தன.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டின் மே 13 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...