Loading...
இலங்கைக்கு 78 ஆயிரம் பைஸர் கொவிட் தடுப்பூசிகள் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கவுள்ளதாக
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதல் 3 வாரங்களில் இலங்கை வந்தடையும்.
Loading...
இதேவேளை, ஜூலை முதல் வாரத்தில் மேலும் 20 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை
வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நேற்று அறிவித்தார்.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட சைனோபார்ம் தடுப்பூசிகளே
இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...