ரியல்மி நிறுவனத்தின் புதிய புல் ஹெச்டி 32 இன்ச் ஸ்மார்ட் டிவி பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் வசதி கொண்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. புது ஸ்மார்ட் டிவி 32 இன்ச் புல் ஹெச்டி மாடல் ஆகும். இதில் ரியல்மியின் பிரத்யேக க்ரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ மற்றும் இதர செயலிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 24 வாட் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ வசதிகள் உள்ளன.
ரியல்மி ஸ்மார்ட் டிவி புல் ஹெச்டி 32 இன்ச் அம்சங்கள்
– 32 இன்ச் 1920×1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே- க்ரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின் – 7 டிஸ்ப்ளே மோட்கள்- 1.1GHz குவாட்கோர் கார்டெக்ஸ் A53 மீடியாடெக் பிராசஸர்- மாலி-470 MP3 GPU- 1 ஜிபி 2133MHz ரேம்- 8 ஜிபி மெமரி- ஆண்ட்ராய்டு டிவி 9.0 – பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, லைவ் சேனல்- வைபை 802.11 b/g/n (2.4GHz), ப்ளூடூத் 5.0, 3 x HDMI, 2 x யுஎஸ்பி- SPDIF, DVB-T2, ஈத்தர்நெட்- 24W ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ
ரியல்மி ஸ்மார்ட் டிவி புல் ஹெச்டி 32 இன்ச் மாடல் விலை ரூ. 18,999 ஆகும். இது ஜூன் 29 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.