செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். அதன்படி நானே வருவேன் படத்தின் இரண்டாவது பாடலை கம்போஸ் செய்து கொண்டிருப்பதாகவும், விரைவில் இந்த பாடலை கேட்க ரசிகர்கள் அனைவரும் தயாராக இருங்கள் எனவும் யுவன் தெரிவித்துள்ளார்.