Loading...
நாடு முழுவதும் 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்டா வகை வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது. இதன் தாக்கம் குறைந்தபிறகு, டெல்டா பிளஸ் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவி வருகிறது.
Loading...
இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Loading...