கார்மின் நிறுவனத்தின் புதிய போர்-ரன்னர் 55 ஸ்மார்ட்வாட்ச் இரண்டு வாரங்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
கார்மின் நிறுவனம் எளிமையாக பயன்படுத்தக்கூடிய ஜிபிஎஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்வாட்ச் போர்-ரன்னர் 55 என அழைக்கப்படுகிறது. இதில் கார்மின் பேஸ் ப்ரோ, பில்ட்-இன் ஜிபிஎஸ், ஏராளமான ஆரோக்கியம் மற்றும் உடல் நலன் சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கார்மின் போர்-ரன்னர் 55 குறைந்த எடை, மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது. இது உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கண்டறிந்து கொள்ள உதவும் ஏராளமான சென்சார்களை கொண்டிருக்கிறது. இதை கொண்டு மன உளைச்சல் அளவுகளை கண்டறிய முடியும். இதுபோன்று மேலும் பல்வேறு உடல்நல விவரங்களை இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம் அறிந்து கொள்ளலம்.
புதிய கார்மின் போர்-ரன்னர் 55 ஸ்மார்ட்வாட்ச் 2 வாரங்களுக்கு தேவையான பேக்கப் வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. ஜிபிஎஸ் மோடில் இயக்கும் போது இந்த ஸ்மார்ட்வாட்ச் 20 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
கார்மின் போர்-ரன்னர் 55 ஸ்மார்ட்வாட்ச் பிளாக், அக்வா மற்றும் மான்டெரா கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 20,990 ஆகும்.