போக்கோ நிறுவனத்தின் புதிய F3 GT ஸ்மார்ட்போன் பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைதளத்தில் சான்று பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் M2104K10I எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது. புதிய சியோமி ஸ்மார்ட்போன் போக்கோ F3 GT மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதால், விரைவில் இது அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
முன்னதாக M2104K10C எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ரெட்மி கே40 கேமிங் எடிஷன் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் சீனாவில் அறிமுகமாகி இருக்கும் ஸ்மார்ட்போனே இந்திய சந்தையில் போக்கோ F3 GT பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
போக்கோ F3 GT மாடலில் 6.67 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்ஐயுஐ 12.5, 16 எம்பி செல்பி கேமரா, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.