முட்டை பலருக்கும் பிடித்த உணவாகும். அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
முட்டையில் உள்ள விட்டமின்கள் கண்ணின் ரெக்டினா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதனால் முட்டையை உண்ணும்போது கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
முட்டையில் உள்ள விட்டமின்கள், தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள் சருமம் மற்றும் கேசத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
ஹைப்போகொலஸ்ட்ரலோமியா நோயால் அவதிப்படுபவர்கள் முட்டையை தவிர்ப்பது நலம்.
அதிகப்படியான முட்டை உண்பது டைப் 2 சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
முட்டையை தேர்வு செய்யும்போது புதிதானதாக இருக்க வேண்டும். கீறிய, உடைந்த முட்டைகளை தவிர்ப்பது நலம். முட்டையை நீரில் போடும்போது மிதந்தால் அது கெட்டது என்பதை அறியலாம்.