Loading...
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் இரண்டு நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் கடந்த 17-ம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களாக இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் கடந்த 18-ம் தேதி காலை ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெறும் மெரினாவுக்கு வந்தார்.
கழுத்தில் பெல்ட் கட்டியபடி வந்த லாரன்ஸ், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களுடன் இணைந்து மவுன போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் உடல்நிலை பாதிப்பிலும் நடிகர் ராகவா லாரன்ஸ் கடந்த மூன்று தினங்களாக பங்கெடுத்து வந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவியாக தனது பங்கிற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் லாரன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கழுத்து வலி அதிகரித்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு சென்றதாக தெரிகிறது.
Loading...