Loading...
யாழில் கணவருடன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், சம்பவத்தில் யாழ்ப்பாணம் வேலணையை சேர்ந்த 32 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் வேலணையிலிருந்து தனது கணவருடன் முச்சக்கர வண்டியில் சுன்னாகத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த பெண் திடீரென மயக்கமடைந்துள்ளார்.
Loading...
இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெண்ணின் மரண விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
Loading...