இந்தியாவில் தனது மனைவியை, கணவரே வேறொரு நபருக்குத் திருமணம் செய்து கொடுத்த நிலையில், முதலிரவுக்குப் பின்னர் மணமகள் நகைகள் மற்றும் பணம் போன்றவற்றுடன் கம்பிநீட்டிய சம்பவம் புதுமாப்பிள்ளைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்தவர்கள் சுனூ மற்றும் கோமல் ஜோடி.
இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு அவர்களிற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை. எனவே, இருவருக்கும் கடுமையான மனச்சோர்வு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டிய நிலைக்கு தள்லப்பட்ட நேரத்தில், அவர்கள் அப்பகுதியில் இருந்த திருமண இடைத்தரகரான சுமனை சந்தித்த பிறகு, அவர்கள் ஒரு திட்டத்தை உருவாக்கினார்கள்.
அதாவது, சோனுவின் மனைவியை, கல்யாணமாகாத பெண்ணாக காண்பித்து, திருமணம் செய்வித்து, மாப்பிள்ளை வீட்டார் சார்பில் போடப்படும் நகைகள் மற்றும் பணம் போன்றவற்றைக் கொள்ளையடித்துச் செல்வதாக அவர்கள் முடிவு செய்துள்ளனர். திருமண தரகர் சுமனின் கூற்றுப்படி, ரவி என்பவருக்கு கோமலைப் பெண் கேட்டுள்ளார்.
கோமலுடன் இருந்த கணவர் சோனுவை, பெண்ணின் சகோதரர் என தரகர் கூறியுள்ளார். இதையடுத்து, ரவி மற்று கோமலுக்குத் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கான முதலிரவு முடிந்த மறுநாள் விழித்துப் பார்த்த போது, கோமலு , வீட்டில் திருமணத்திற்குப் போடப்பட்டிருந்த நகைகள், பணம் எனப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் காணம் போயிருந்தது.
இதையடுத்து, ரவி குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தரகர் உள்ளிட்ட மூன்று பேரையும் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.