எதிரிகள் விலகி இன்பம் கூடும் நாள். சேமிப்பு அதிகரித்தாலும் சிக்கனத்தைக் கையாளுவீர்கள். தொழில் ரீதியான பயணங்கள் ஏற்படலாம். உறவினர் பகை மாறும். மாலையில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகலாம்.
போட்டிகளைச் சமாளிக்க வேண்டிய நாள். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மரியாதை கொடுப்பர். கட்டிடப் பணியைத் தொடரும் எண்ணம் உருவாகும். பஞ்சாயத்துக்களில் சாதமான முடிவுகள் ஏற்படலாம்.
எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும் நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். தொழில் நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். பணவரவு திருப்தி தரும்.
அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட உபத்திரவம் மாறும் வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். மாலையில் மங்கலச் செய்தியொன்று வந்து சேரலாம்.
பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். மக்கள் செல்வாக்குப் பெற்றவர் ஒருவர் உங்கள் காரிய வெற்றிக்கு கைகொடுத்து உதவுவார்.
பிற்பகலில் பிரச்சினைகள் தீரும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்ப மேன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை அமையும். பாக்கிகள் வசூலாகும்.
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். அதிக செலவில் முடியும் என நினைத்த காரியமொன்றில் அதிகமாகச் செலவாகலாம். விரதம்இ வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள்.
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். உதிரி வருமானங்கள் பெருகும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும்.
பணவரவு திருப்தி தரும் நாள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறலாம். தொழில் முயற்சிகளில் ஏற்பட்ட தடுமாற்றம் அகலும். நீண்ட நாளைய வேண்டுதலை நிறைவேற்ற முன்வருவீர்கள்.
முன்னேற்றம் காண முக்கிய முடிவெடுக்கும் நாள். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் தீரும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். நெடுநாளைய நண்பர்கள ஒருவரின் சந்திப்பு கிட்டும்.
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள திட்டமிடுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.
பேச்சிலும், செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். கூட்டாளிகளிடம் கவனமாக இருப்பது நல்லது. உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் உறவினர் பகை ஏற்படாமல் இருக்கும்.