புலாவ், சாதம், நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த இறால் மஞ்சூரியன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் – கால் கிலோ
சில்லி பிளேக்ஸ் – சிறிதளவு
வெங்காயத்தாள் – தேவைக்கு
பெ.வெங்காயம் – 1 (நறுக்கவும்)
குடைமிளகாய் – 1 (நறுக்கவும்)
பூண்டு – 5 பல்
மிளகாய் சாஸ் – 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
இறாலை கழுவி சுத்தம் செய்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இறாலை போட்டு பொரித்தெடுத்துக்கொள்ளவும்.
பின்னர் வெங்காயத்தை கொட்டி தனியாக வதக்கவும்.
அடுத்து பூண்டு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் சோயா சாஸ், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சில்லி பிளேக்ஸ், உப்பு போன்றவற்றை கலந்து பச்சை வாசம் நீங்கும்வரை வதக்கவும்.
அதன் பிறகு குடைமிளகாய், வெங்காயத்தாள் சேர்த்து லேசாக வதக்கி, இறாலை கொட்டி கிளறி இறக்கவும்.
ருசியான இறால் மஞ்சூரியன் ரெடி.