வலப்பனைப்பிரதேசத்தில் சிறுத்தை ஒன்றைக் வேட்டையாடிய சந்தேக நபர்கள் மூன்று பேரை நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வட்ஸ்அப் புகைப்படம் மூலம் தகவல் அறிந்து நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
வலப்பனை மூர்ஓயா தோட்டப் பகுதியில் பொறிவைத்து மேற்படி சிறுத்தையை பிடித்து இறைச்சிக்காக விற்றுள்ளனர்.
அதில் ஒரு சந்தேக நபர் தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பிய வட்ஸ்அப் படம் மூலம் விடயத்தை தெரிந்து கொண்ட நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வலப்பனை பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
ஒரு சந்தேக நகரிடமிருந்து உலர விடப்பட்ட சிறுத்தைத்தோலும் மற்றைய சந்தேக நபரிடமிருந்து சிறுத்தையின் பல்லும் அதிகாரிகளால் கைப்பற்றப்படுள்ளது.
சந்தேக நபர்களை வலப்பனை நீதவான் முன் ஆஜர் செய்த போது தலா ஒரு இலட்ச ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை செப்டம்பர் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.