“தமிழன் என்று சொல்லடா… தலை நிமிர்ந்து நில்லடா” என்கிற வீர வாக்கியத்தில்தான் எங்கள் வாழ்க்கையே இருக்கிறது என்று மீண்டும் உலகத்துக்கு நிரூபித்து இருக்கிறார்கள், தமிழ் இளைஞர்கள்.
தமிழ்நாட்டில் மாடு வளர்க்கிற ஒவ்வொரு வீட்டிலும் பசுவை கோமாதா என்கிற தாயாகவும், காளையை சிவனாக தந்தையாகவும்தான் வணங்கி பாதுகாப்பார்கள். அந்த குடும்பத்தின் மொத்த பாசத்தையும் கொட்டி வளர்ப்பார்கள். இவர்கள் மிருகமாகவே பார்க்காதபோது, அதை எப்படி கொடுமைப்படுத்துவார்கள்?
எப்படி திருக்குறளுக்கு முப்பால் இருக்கிறதோ, அதே மாதிரி தமிழனுக்கும் இருக்கிறது. அது தமிழ் பால், தாய்ப்பால், பசும்பால். இந்த மூன்றையும் எங்கேயும் எப்போதும் தமிழர்கள் விட்டுத்தர மாட்டார்கள்.
கேக் இல்லாமல் கிறிஸ்துமஸ் இல்லை. பிரியாணி இல்லாமல் ரம்ஜான் இல்லை. அதேபோல் ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் இல்லை. இது, தமிழனின் பாரம்பரியம், கலாசாரம். அதை யாரும் பரிசோதிக்காமல், தமிழனை மனிதனாக வாழ விடுங்கள்.”
மேற்கண்டவாறு பி.வாசு கூறியிருக்கிறார்.