மத்தல சர்வதேச விமான நிலையம் தற்போது மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையமாக மாற்றம் பெற்றுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் மேற்கொள்ளப்படுகின்ற புனரமைப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல விமான நிலையத்தில் தற்போது சேவை பெற்றுக் கொள்வதற்காக பாரிய அளவிலான விமானங்கள் அங்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்தல விமான நிலையத்தின் முகாமைத்துவத்திற்காக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கான அனைத்து விமானங்களும் தங்கள் மாற்று விமான நிலையமாக மத்தல விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றார்கள்.
இதற்கு மேலதிகமாக பிளே டுபாய், இந்தோனேசியாவின் ஸ்ரீ விஜய மற்றும் மேலும் சில விமான சேவைகள் மத்தல விமான நிலையத்திற்கு செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.
மத்தல விமான நிலையத்தின் பிரதான நிர்வாகி உப்புல் கலங்சூரிய இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
மத்தல ராஜபக்ச விமான நிலையத்தில் பயணிகளுக்கு அவசியமான அனைத்து வசதிகளும் தற்போது நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். விசேடமாக விமான நிலையத்தை நெருங்கும் பயணிகளுக்கு அவசியமான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உண்மையாக மாற்று விமான நிலையமாக தற்போதுவரையில் மத்தல சர்வதேச விமான நிலையம் பாரிய அந்நிய செலாவணிகளை மீதப்படுத்தியுள்ளது. கடந்த காலங்கள் முழுவதும் கட்டுநாயக்க விமான நிலையத்தை நெருங்க முடியாத பல விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களிலும் இந்த நிலைமையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு செயற்பட நேரிடும் என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.