Loading...
விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான ‘பைரவா’ படம் பொங்கலுக்கு வெளியானது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய், சூர்யாவைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி-2’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பிப்ரவரி மாதம் ‘சண்டக்கோழி-2′ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
Loading...
இந்நிலையில் நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள `நேனு லோக்கல்’ படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தில் நவீன் சந்திரா, போசனி கிருஷ்ணா முரளி, சச்சின் கேதேக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரிநாத்ராவ் நகீனா இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
Loading...