Loading...
உலக நாயகன் கமல்ஹாசன் தொடக்கம் முதலே ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து வருகிறார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்கவேண்டி
வலியுறுத்தி வந்த கமல் தற்போது ஜல்லிக்கட்டுக்கு வேண்டி அறவழியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு தனது ஆதரவையும், பாராட்டுகளையும் தெரிவித்த அவர், தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவர்களை ஊக்கப்படுத்தி சில டுவிட்டுகளையும் போட்டு வருகிறார்.

முன்னதாக நடிகை த்ரிஷாவிக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராடிய போது, “அவர்க்கும் நமக்குமுள வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
Loading...
பின்னர், ‘ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல்’ என்று பதிவுசெய்திருந்தார்.
இந்நிலையில், ”நான் TV செய்தியை பார்ப்பது உங்களைப் பார்க்கத்தான். பனித்த கண்களுடன் நான் பார்ப்பது மாணவர் கூட்டமல்ல நவ நல்லாசிரியர் கூட்டம். வணங்குகிறேன்” என்று கூறி கண்கலங்குவதாக தெரிவித்துள்ளார்.
Loading...