பெண்களின் அழகை மெருகேற்றுவதில் உதடுகளும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆனால் நூற்றில் எண்பது பேருக்கு சரி உதடு கருமையாக காணப்படும்.
சூரிய ஒளித்தாக்கம் மற்றும் இறந்த செல்கள் போன்றவை உதட்டின் மேல் அப்படியே இருப்பதால் உதடுகள் கருமையாக மாறி விடுகிறது. உங்க முகமே அழகாக இருக்கும் பட்சத்தில் உதடுகள் மட்டும் கருப்பா அசிங்கமாக இருந்தால் எப்படி இருக்கும். எனவே உதடுகளை அழகாக பராமரிப்பதும் மிகவும் அவசியம்.
இதற்கு செயற்கை பொருட்களை தான் பாவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டு கூட எளிய முறையில் உதட்டை அழகுப்படுத்த முடியும்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் இருந்து ஜெல்லை மட்டும் பிரித்தெடுத்து உதடுகளில் அப்ளே செய்து வரலாம். இது உதட்டிற்கு ஈரப்பதத்தை தருவதோடு அதிகப்படியான மெலனின் உற்பத்தியை தடுக்கிறது. இதை மஞ்சளுடன் கலந்து பயன்படுத்துங்கள்.
முதலில் உங்க விரல்களை நீரில் நனைத்துக் கொண்டு அப்புறமாக இந்த கற்றாழை ஜெல் பேஸ்ட்டை எடுத்து உதடுகளில் அப்ளே செய்து வாருங்கள். 10-15 நிமிடங்கள் கழித்து உதடுகளை கழுவி விடுங்கள். பிறகு உதட்டுக்கு மாய்ஸ்சரைசர் பாமை அப்ளே செய்து கொள்ளுங்கள்.
மாதுளை பழம்
டேபிள் ஸ்பூன் மாதுளை விதைகள், 1 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டேபிள் ஸ்பூன் ப்ரஷ் க்ரீம் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து உதடுகளில் 3 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்து வாருங்கள். உங்க உதடுகளில் உள்ள கருமை போவதை கண்கூடாக காணலாம்.
பாதாம் பருப்பு – பாதாம் பருப்பு பொடி மற்றும் பால் க்ரீம் இரண்டையும் கலந்து உதடுகளில் தடவி 3-5 நிமிடங்கள் காத்திருக்கவும். பாதாம் எண்ணெய்யை தினமும் உதடுகளில் தடவி வர சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. பாதாம் பருப்பில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்க உதடுகளை மென்மையாக்கி ஈரப்பதமாக்குகிறது.